மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு இணைக்குழு!

ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க  சிறப்பு இணைக்குழு!

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு இணை பணிக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தேவை அதிகமாகியுள்ளது. . தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளில் 5 டன் ஆக்சிஜன் நெல்லை மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்டது. பின்பு, இயந்திரங்கள் பழுதடைந்ததால் மூன்று நாட்களுக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இருப்பினும், தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

ஒடிசா மாநிலத்திலிருந்து ஆக்சிஜனை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்காக சேலம் வன பாதுகாவலர் பெரியசாமி, வேளாண்துறை அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகம் செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் மருத்துவ குழு கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து,

தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான பணிகளை கவனிக்க ஐஏஎஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராகவும் ஆக்சிஜன் ஆணையராகவும் தரேஸ் அகமது ஐஏஎஸ் செயல்படுவார். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளரான மீனா ஐஏஎஸ் மற்றும் பெட்ரோலிய எரிபொருள் பாதுகாப்பு அமைப்பு அலுவலர் சஞ்சனா ஷர்மா ஆகியோர் மத்திய அரசு பிரதிநிதிகளாக இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மயக்கவியல் துறை தலைவர் உறுப்பினராகவும், ஸ்டான்லி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைவர் உறுப்பினராகவும் என 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்கும் ஆக்சிஜன் முறையாக மாநிலத்துக்கு வந்தடைகிறதா, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் முறையாக அனுப்பப்படுகிறதா, வெளிப்படைத் தன்மையுடன் ஆக்சிஜன் வினியோகம் நடைபெறுகிறதா ஆகியவை குறித்து இந்தக் குழு கண்காணிக்கும்.

தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 20 மே 2021