மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

20 அமைச்சர்களுடன் பொறுப்பேற்கும் பினராயி விஜயன்

20 அமைச்சர்களுடன் பொறுப்பேற்கும் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று (மே 20) முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் உட்பட 21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை இன்று மாலை 3.30 மணிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் பதவி ஏற்கவுள்ளது. ஆளுநர் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள நிலையில் இன்று காலை புன்னபுரா வயலார் தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார் பினராயி விஜயன்.

புதிய அமைச்சரவை

எம். வி. கோவிந்தன், கே.ராதாகிருஷன், பி.ராஜீவ், கே.என். பாலகோபால், வி.என்.வாசவன், வி.சிவன்குட்டி,சஜி செரியன், வீணா ஜார்ஜ், பி. ஏ முகமது ரியாஸ், ஆர். பிந்து, வி.அப்துல் ரஹ்மான், கே.ராஜன், பி.பிரசாத், ஜி. ஆர். அனில் , ஜே.சின்சு ராணி, ஏ. கே. சசீந்திரன், கே.கிருஷ்ணன்குட்டி, ரோஷி அகஸ்டின், ஆண்டனி ராஜு, அஹமது தேவர்கோவில் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

இவர்களில் கிருஷ்ணன்குட்டி (நீர் வளத் துறை அமைச்சராக இருந்தவர்), ஏ. கே. சசீந்திரன் ( கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர்) ஆகியோரைத்தவிரை அனைவரும் புதுமுகங்கள்.

சைலஜா இடத்தில் வீணா ஜார்ஜ்

கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு பெருந்தொற்றுகளைச் சிறப்பாகக் கையாண்டு உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு இம்முறை எந்தப் பொறுப்பும் அமைச்சரவையில் கொடுக்கப்படவில்லை.

இந்தியளவில் கவனம் ஈர்த்த அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் வகித்து வந்த சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வீணா ஜார்ஜுக்கு கொடுக்கப்பட்டது.

சைலஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்காத நிலையில், நடிகை ரம்யா நம்பீசன், மாளவிகா மோகனன் உட்பட பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

வீணா ஜார்ஜ் யார்

வீணா ஜார்ஜ் 15 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றியவர். 2016-ல் ஆரன்முளா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில், பத்திணம்திட்டா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இப்போது இரண்டாவது முறையாக ஆரன்முளா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றிருக்கிறார்.

பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாசுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து அமைச்சர்களும் இன்று மாலை பொறுப்பேற்கின்றனர்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 20 மே 2021