மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!

ஆம்புலன்ஸ் சைரன் ஒலி மக்களிடையே பீதி, பதற்றத்தை ஏற்படுத்துவதால், அதை ஒலிக்க வேண்டாம் என மணிப்பூர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை லட்சக்கணக்கில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நாலா பக்கமும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் ஒலி காதை கிழிக்கிறது. எப்போதாவது எங்கேயோ கேட்டுக் கொண்டிருந்த சைரன் சத்தம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சத்தத்தை கேட்கும்போதே மக்களிடையே பீதி ஏற்படுகிறது. இந்த பதற்றத்தை குறைக்கும் வகையில் மணிப்பூர் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்குவோருக்கு மணிப்பூர் மாநில மருத்துவ இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ஆம்புலன்ஸின் சைரன் ஒலி மக்களிடையே கொரோனா பீதியை உருவாக்குகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதனால், பதற்றத்தை உருவாக்கும் சைரனை ஒலிக்க வேண்டாம். சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் செல்ல தாமதம் ஏற்பட்டால் மட்டுமே சைரனை ஒலிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 20 மே 2021