மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

கோயில் சொத்துகள்: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!

கோயில் சொத்துகள்: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!

தமிழகத்தில் அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), பெ.இரமண சரஸ்வதி , கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், இணை ஆணையர்கள், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர், துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்ய வேண்டும்.

கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் (Publishing) வெளியிட வேண்டும்.

கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் (Uploading) பதிவேற்ற வேண்டும்.

கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள கோயில்களின் வரவு செலவுகள், கோவில் சொத்துக்கள் அனைத்தையும் இந்து அறநிலையத் துறை பார்த்து வருகிறது. ஆனால் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வந்த நிலையில், இந்து அறநிலையத் துறை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 20 மே 2021