மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

பாமக எம்.எல்.ஏ.வின் தற்கொலை முயற்சி -தடுத்த ராமதாஸ்

பாமக எம்.எல்.ஏ.வின் தற்கொலை முயற்சி -தடுத்த ராமதாஸ்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு தொகுதியில் இரா. அருள், மேட்டூர் தொகுதியில் சதாசிவம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஜி.கே.மணி, தர்மபுரியில் வெங்கடேஸ்வரன், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் சிவக்குமார் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தானாகவே பாமக நிறுவனருக்கு போன் செய்து நலம் விசாரித்தார். இதில் நெகிழ்ந்து போன மருத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, அவரது அம்மா தயாளு அம்மாள் நலத்தையும் விசாரித்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் விதத்தில் சில அணுகுமுறைகளைத் தொடங்கியுள்ளார். கொரோனா தடுப்புப் பணிகள் பற்றிய ஆலோசனைகளுக்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார். அதில் பாமக சார்பில் ஜி.கே. மணி இடம்பெற்றிருக்கிறார்.

இந்த சூழலில் திமுகவோடு அனுசரணையாக செல்வது என்று பாமக முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக செயல்பட நினைத்த பாமக எம்.எல்.ஏ. ஒருவர் சில மணி நேரங்களில் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான பாமகவைச் சேர்ந்த இரா. அருள், மே 17 ஆம் தேதி இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஒரு பாலித்தின் பையால் தன் தலையை இறுக்கக் கட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதோடு,

“சேலத்தில் என் மக்களுக்கு இல்லாத ஆக்ஸிஜன் எனக்கு தேவையா என்று யோசித்து வருகிறேன். காலை எனது தலையை பிளாஸ்டிக் பையை கயிற்றால் கட்டிக் கொண்டு இந்தப் படத்தில் உள்ளது போல சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாசலில் உங்கள் எம்.எல்.ஏ. காலை 9.30 மணிக்கு தர்ணா செய்ய திட்டமிட்டுள்ளேன்.

உங்களது வேலைக்காரனாக இதை செய்யவா? கருத்தை சொல்லவும். எனக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்த உங்களுக்கு இப்போது கொடுக்க எனது உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. கண்ணீருடன் இரா. அருள் எம்.எல்.ஏ.

திருத்தம்: நமது ஆலோசகர்களின் ஆலோசனையை ஏற்று அய்யா சின்னய்யா அனுமதியோடு இன்னும் இரு நாள் வாய்ப்பு தந்து தர்ணா” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் இரா. அருள் எம்.எல்.ஏ.

18 ஆம் தேதிதான் பாமகவின் இளைஞரணிச் செயலாளரான அன்புமணி எம்பி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்,

“தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தவாறு எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்”என்று தெரிவித்திருந்தார்,.

இந்த சூழலில் பாமக எம்.எல்.ஏ.அருளின் இந்த தற்கொலை முயற்சி பற்றிய அறிவிப்பு அவரது ஆதரவாளர்களிடையேயும் பாமக தலைமையிலும் சலசலப்பை எழுப்பியது. இதையடுத்து

மறுநாள் 18 ஆம் தேதி அதிகாலையிலேயே அருள் எம்.எல்.ஏ. தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

“இரவு முழுதும் பல தொலைபேசி அழைப்புகள், கமெண்டில் உங்களது நூற்றுக்கணக்காண ஆலோசனைகளை ஏற்று எனது முந்தைய பதிவை நீக்குகிறேன். உங்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளோடு விழிப்புணர்வு பரப்புரையை மட்டும் உங்களது ஆலோசனைப்படி முன்னெடுத்துச்செல்வோம். நன்றி -இரா.அருள் MLA” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பாமக தலைமையிடம் இருந்து வந்த உத்தரவின் பேரில் 19 ஆம் தேதி காட்சி மாறியது. சேலம் இரும்பாலையில் 500 ஆக்ஸிஐன் வசதியுடன் கூடிய மருத்துவமனையின் பணியை விரைவு படுத்தும் பணி தொடர்பான ஆலோசனையில் சேலம் மாவட்ட ஆட்சிதலைவர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தியபோது , சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்களான அருள்,சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 20 மே 2021