மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

சேலத்தில் காய்கறி சந்தைகள் மூடப்படும்!

சேலத்தில் காய்கறி சந்தைகள் மூடப்படும்!

சேலம் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தைகள் மூடப்படுவதாகவும், இனி நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் உருக்காலையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதையொட்டி, நேற்று (மே 19) மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய நான்கு துறையும் கொரோனா தடுப்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான உழவர் சந்தைகள், தனியார் காய்கறி மார்க்கெட்டுகள் ஆகியவை ஊரடங்கு முடியும்வரை முழுமையாக மூடப்படும். மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவற்றின் மூலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 177 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்துக்கு இரண்டு குழு வீதம் மொத்தம் 354 குழுக்கள், நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இவர்கள், நேரடியாகச் சென்று நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 13ஆம் தேதி 13.32 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது அரசின் முழு நடவடிக்கைகள் காரணமாக 10.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. விரைவில் இதை பூஜ்யம் சதவிகிதமாக கொண்டு வரப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 20 மே 2021