மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயமில்லை: புதிய அறிவிப்பு!

தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயமில்லை: புதிய அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லை என்று யாருக்கும் தடுப்பூசி மருந்து அல்லது மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்பட மாட்டாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - உடாய்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் என்று சொல்லி, பெங்களூருவில் ஆதார் கொண்டுவராதவர்களுக்கு இந்த சேவைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இன்று (மே 19) ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“கொரோனா தொற்று சூழ்நிலைகளில். ஒருவருக்கு ஆதார் இல்லை என்பதால் சேவைகள் மறுக்கப்படாது. ஒருவரிடம் ஆதார் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறை ஆதார் சட்டம், 2016இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பர் 19-ம் தேதியிட்ட அமைச்சரவை செயலக ஆணை ஆகியவற்றின்படி அவருக்கு உரிய தடுப்பூசி அல்லது மருத்துவ உதவியை வழங்க வேண்டும்..

எந்தவொரு அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணமாக ஆதாரை தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. ஆதார் நிறுவனத்தில் நிறுவப்பட்ட விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை (Exception Handling Mechanism) உள்ளது. மேலும், ஆதார் இல்லாத நிலையில் சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய இதனை பின்பற்ற வேண்டும். எனவே ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின்படி அத்தியாவசிய சேவைகளை மறுக்கக் கூடாது”என்று குறிப்பிட்டிருக்கும் ஆதார் ஆணையம்,

“தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வாயிலாக பொது சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதே ஆதாரின் நோக்கம். மேலும், அமைச்சரவை செயலகம் டிசம்பர் 19, 2017 அன்று தேதியில் வெளியிட்ட ஆணையில் ஆதார் இல்லாத குடியிருப்பாளர்கள் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறையை தெளிவாக விளக்கியுள்ளது. இது போன்ற சேவைகள் மறுக்கப்பட்டால். சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு விஷயத்தை கொண்டுவர வேண்டும்”என்று பெங்களூரு உடாய் மண்டல அலுவலக மேலாளர் ஆனந்த் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 19 மே 2021