மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

உருமாற்றம் அடைந்த கொரோனா : சிங்கப்பூர் கொடுத்த பதில்!

உருமாற்றம் அடைந்த கொரோனா : சிங்கப்பூர் கொடுத்த பதில்!

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், உடனடியாக அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகலாம். அதனால், சிங்கப்பூர்-இந்தியா இடையேயான விமானச் சேவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என டெல்லி முதல்வர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவு குறித்து என்டிடிவி உள்பட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டியிருந்தன. அதன்படி, மின்னம்பலமும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி முதல்வரின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்து, விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இல்லை. சிங்கப்பூரில் எந்தவிதமான புதிய உருமாற்ற கொரோனா வைரஸ் இல்லை. கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் பரவிவரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் பி.1.617.2 வகை வைரஸ்தான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ”அரசியல்வாதிகள் உண்மையை பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரின் கூற்றுக்கு சிங்கப்பூர் வலுவான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் " இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் சப்ளை செய்வதில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்று இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு பேணப்பட்டு வருகிற நிலையில், பொறுப்பற்ற கருத்துக்களால் நீண்ட கால கூட்டாட்சிக்கு சேதம் ஏற்படுத்துகிறது.சிங்கப்பூருக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவுக்காக பேசவில்லை " என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 19 மே 2021