மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

விஜயகாந்த் உடல்நிலை: தேமுதிக விளக்கம்!

விஜயகாந்த் உடல்நிலை: தேமுதிக விளக்கம்!

தேமுதிக பொதுச் செயலாளரும் நடிகருமான விஜயகாந்த் இன்று (மே 19) அதிகாலை சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவர் மிகச் சில தொகுதிகளுக்கே பிரச்சாரத்துக்கு சென்றார். அதுவும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்.

இந்த நிலையில் சாலிகிராமம் வீட்டில் இருந்த விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (மே 19) அதிகாலை அவதிப்பட்டதால் அவர் வழக்கமாக பரிசோதனை மேற்கொள்ளும் மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடன் அவரது குடும்பத்தினர் சென்றிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் பரவியதும் தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் விஜயகாந்தின் உடல் நிலை பற்றிய தகவல்களை அறிய தலைமைக் கழகத்தை தொடர்புகொண்டனர். கொரோனா தொற்று காலமாக இருப்பதால் விஜயகாந்தின் உடல் நலம் பற்றி அவர்கள் பதற்றம் கொண்டனர்.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் உடல் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

“ விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்”என்று தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 19 மே 2021