மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’: 549 மனுக்களுக்குத் தீர்வு!

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’: 549 மனுக்களுக்குத் தீர்வு!

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 549 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதற்கு ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரிடம் கடந்த 9ஆம் தேதி முதல் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 72 மரப்பெட்டிகளிலும், 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அந்த எண் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பட தொடங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை நேற்று(மே 18) வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் 549 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனுவை பிரித்த 12 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், பெறப்பட்ட மனுக்களில் 0.14% அளவுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரிடம் நேரடியாக உதவிகளை பெற்றவர்களின் விவரம்:

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராணி- முதியோர் உதவித்தொகை

பரங்கிமலையை சேர்ந்த நித்யா- விதவை உதவித்தொகை

தி.நகரை சேர்ந்த சத்தியநாராயணன் - மாற்றுத்திறனாளி உதவித்தொகை

சூளைமேட்டை சேர்ந்த தாயாரம்மா- முதிர் கன்னி உதவித்தொகை

தண்டையார்பேட்டையை சேர்ந்த சுமதி- தையல் இயந்திரம்

வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார்- வாரிசு சான்றிதழ்

ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த நந்தினி -காதுகேட்கும் கருவி

ராணிப்பேட்டை, கொண்டபாளையத்தை சேர்ந்த ஜெயந்தி - இலவச வீட்டு மனை பட்டா

ராணிப்பேட்டை, வெங்குபட்டு ஊராட்சியை சேர்ந்த முத்துராமன் - வீடு கட்ட உதவி

ராணிப்பேட்டை,சிறுவாளையத்தை சேர்ந்த சுபாஷ்- சொட்டுநீர் பாசன உதவி.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 19 மே 2021