மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

இ-பதிவு தேவையில்லை, அடையாள அட்டை போதும்!

இ-பதிவு தேவையில்லை, அடையாள அட்டை போதும்!

சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்லும் முன்களப் பணியாளர்கள், போலீஸார் வாகனத் தணிக்கையின்போது அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்கலாம் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை காவல் எல்லைக்குள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதற்கு இ-பதிவு கட்டாயம் என நேற்று காவல்துறை அறிவித்தது. இதையடுத்து, சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, சென்னை அண்ணா சாலையில் இ-பதிவு வைத்திருந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊடகங்கள், மருத்துவமனை பணியாளர்கள் என அத்தியவாசிய பணிகளுக்காகச் செல்பவர்களிடம் இ-பதிவு கேட்டு போலீசார் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதால், இந்தப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த இ-பதிவு முறையில் முன்களப் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமும் போலீசார் இ-பதிவு கேட்டதால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு (மே 18) சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசு பணியாளர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாக செல்லும் போது, வாகன சோதனையின்போது, போலீசாரிடம் அடையாள அட்டையைக் காண்பித்தால் போதுமானது. அவர்களுக்கு இ -பதிவு தேவையில்லை. அடையாள அட்டை வெளியில் தெரியும்படி அணிந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முக்கிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், 044-23452320 மற்றும் 9498130011 என்ற எண் மூலம், சென்னை பெருநகர மக்கள் தொடர்பு உதவி கமிஷனரை தொடர்புகொள்ளலாம்.

சென்னையில் நேற்று (மே 18) மாலை 6 மணிவரை சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து காவல் குழுவினரால் கொரோனா ஊரடங்கு தடையை மீறியதாக 4,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 19 மே 2021