மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

'சிங்கப்பூர்' கொரோனா : எச்சரிக்கும் டெல்லி முதல்வர்!

'சிங்கப்பூர்' கொரோனா : எச்சரிக்கும் டெல்லி முதல்வர்!

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியா-சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும், அது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், "சிங்கப்பூரில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது, இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும். அதனால், இந்தியா-சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்துவதில் குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசும் மோடி அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிகளவில் குழந்தை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் மே 28ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. மேலும், இந்த வைரஸ் குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகத் தெரிகிறது. இருப்பினும், இதுவரை பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரும் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை. 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் அலை அச்சம்

முதல் அலையில்( சீனா வைரஸ்) பெரியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலை(பிரிட்டன் உருமாறிய வைரஸ்) இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் அலை சிங்கப்பூர் உருமாறிய வைரஸ் மூலம் பரவக் கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொற்று பரவலின் ஒவ்வொரு முறையும் விமானங்களை உடனடியாக நிறுத்தாமல் இந்திய ஒன்றிய அரசு செய்த இமாலயத் தவறு மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமாக தொடர்கிறது.

இரண்டு அலைகளுக்கே இந்நாடு் சுடுகாடு ஆகிவரும் நிலையில் அதிக அளவில் இன்னொரு ஒரு புதிய அலை ஒன்று நாடு முழுவதும் குழந்தைகளை தாக்கினால், அதை எதிர் கொள்ள எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாத நிலையில், அதன் தாக்கத்தால் குழந்தைகள் படும் இன்னல்கள் காண இயலாத கொடூரமாக இருக்கும்.

குழந்தைகள் உள்ள இளம் பெற்றோர்கள் உடனடியாக தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

செவ்வாய் 18 மே 2021