மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

இணையதளம் மூலம் ரெம்டெசிவிர்: அரசு எச்சரிக்கை!

இணையதளம் மூலம் ரெம்டெசிவிர்: அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக, மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகளவில் கூடினர். மேலும், மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் எழுந்துள்ளன.

இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்தை விண்ணப்பித்து அந்தந்த பிரதிநிதிகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.

அதன்படி, இன்று முதல் மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இணைய தளத்தில் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம், மருத்துவமனை விவரம், தொற்று அறிகுறி, இணைநோய் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மருந்திற்கான தொகையை அங்கேயே செலுத்திக் கொள்ளலாம். பதிவு செய்த பின்னர், தனியார் மருத்துவமனைகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி மருந்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தின் மூலமாக பெறப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசிடமிருந்து வாங்கக்கூடிய அதே விலையிலேயே நோயாளிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோன்று, ஆக்சிஜன் தேவைக்கும் தனியார் மருத்துவமனைகள் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 18 மே 2021