மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

கார் ஆம்புலன்ஸ்: சென்னைக்கு மட்டுமா?

கார் ஆம்புலன்ஸ்: சென்னைக்கு மட்டுமா?

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார் ஆம்புலன்ஸ்களை கடந்த 15,16 ஆகிய இருநாள்களில் 1251 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

சென்னையில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், 108 ஆம்புலன்ஸ்களுக்கான தேவையும் அதிகரித்தது. இதனால், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். நோயாளிகள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்ல வசதியாக சென்னை மாநகராட்சி சார்பில், கால் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”கார் ஆம்புலன்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், ஆம்புலன்ஸ்கள் மீதான சுமையும் குறைந்துள்ளது. குறிப்பாக, அதிக பாதிப்புள்ள மண்டலங்களில் கார் ஆம்புலன்ஸ் மிகவும் பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 15ஆம் தேதி 225 கார் ஆம்புலன்ஸ் மூலம் 607 நோயாளிகள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை மே 16 ஆம் தேதி 644 ஆக அதிகரித்தது. மொத்தமாக, இருநாட்களில் 1251 பேர் கார் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது, ஒரு கார் ஆம்புலன்ஸ் ஒரு நாளில் நான்கு நோயாளிகளை ஏற்றி செல்கிறது. இந்த எண்ணிக்கையை 6 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடையாறு, வளசரவாக்கம், ராயபுரம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாளுக்கு 5 முதல் 10 நோயாளிகள் வரை கார் ஆம்புலன்ஸை பயன்படுத்துகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய முக்கிய மாவட்டங்களிலும் கார் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கினால், பயன் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 18 மே 2021