மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்!

ஆந்திராவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் ஒவ்வொரு குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பை குறைக்க மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வைரஸ் பரவுவதை தடுக்க முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திராவில் பெரும் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.

அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வங்கியில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும். வங்கியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் குழந்தைகளின் பெயரில் ரூ .10 லட்சம் டெபாசிட் செய்யப்படும். குழந்தைக்கு 25 வயதாகும் வரை இந்த பணம் வங்கியில் இருக்கும். இந்த பணத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், குழந்தையின் பாதுகாவலருக்கு 5-6% வட்டி வழங்கப்படும். இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, கொரோனா தொற்றால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு தலா ரூ.15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 18 மே 2021