மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா!

ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(மே 17) வெளியிடப்பட்ட அறிக்கையில்,

”தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 16,31,291 ஆக அதிகரித்துள்ளது. இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களில்18,719 ஆண்கள்,14,356 பெண்கள்.

அரசு மருத்துவமனையில் 183 பேர், தனியார் மருத்துவமனையில் 152 பேர் என இன்று மட்டும் 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 18,005 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20,486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 13,81,690 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,56,278 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 2,31,596 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 6150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 44,4371 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 2154 பேரும், கோவையில் 3264 பேரும், ஈரோட்டில் 1093 பேரும், காஞ்சிபுரத்தில் 1241 பேரும், கன்னியாகுமரியில் 1069 பேரும், மதுரையில் 1288 பேரும், தஞ்சையில் 1019 பேரும், திருவள்ளூரில் 1829 பேரும், தூத்துக்குடியில் 1024 பேரும், திருச்சியில் 1544 பேரும், திருப்பூரில் 880 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

திங்கள் 17 மே 2021