மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

அதிரடியாக எட்டு மருத்துவமனை டீன்கள் மாற்றம்!

அதிரடியாக எட்டு மருத்துவமனை டீன்கள் மாற்றம்!

தமிழகத்தில் கீழ்ப்பாக்கம், மதுரை விருதுநகர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு, கொரோனா தடுப்பு பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும், அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் எட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவக் கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குநரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 17 மே 2021