மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தம்!

கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 33,181 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,19,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில், நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர்த்து மற்ற பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வர தடை விதிக்கப்படுகிறது.

நீதிபதிகளிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நீதிமன்றத்திற்கு வர வேண்டும். தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 17 மே 2021