மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

முதல்வரை சந்தித்த ரஜினி: கொரோனா தடுப்புக்கு ரூ 50 லட்சம்!

முதல்வரை சந்தித்த ரஜினி: கொரோனா தடுப்புக்கு ரூ 50 லட்சம்!

தமிழக அரசின் கொரோனா தொடர்பான பணிகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி அளித்துள்ளார்.

இன்று (மே 17) தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ரஜினிகாந்த், தன் சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்காக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.

சில தினங்களுக்கு முன்புதான் அண்ணாத்தே படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி தமிழக முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துகள் சொல்வதற்காக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாழ்த்துகளோடு தற்போதைய தமிழகத்தின் சூழலை கருதி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்யவும் திட்டமிட்டு முதல்வரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தார் ரஜினிகாந்த்.

முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்த நிலையில் இன்று காலை 12 மணியளவில் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 50 லட்சம் நிதியுதவியை அளித்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்க வேண்டும். பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” என்று கூறினார்.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 17 மே 2021