மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கச் சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 13 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

1.திமுக – மருத்துவர் நா.எழிலன்

2.அதிமுக – மருத்துவர் சி.விஜயபாஸ்கர்

3.காங்கிரஸ் – ஏ.எம்.முனிரத்தினம்

4.பாமக – ஜி.கே.மணி

5.பாஜக – நயினார் நாகேந்திரன்

6.மதிமுக – தி.சதன் திருமலைக்குமார்

7.விசிக – எஸ்.எஸ்.பாலாஜி

8.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – வி.பி.நாகை மாலி

9.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தி.ராமசந்திரன்

10.மமக – ஜவாஹிருல்லா

11.கொ.ம.தே.க – ரா.ஈஸ்வரன்

12.தமிழக வாழ்வுரிமை கட்சி – தி.வேல்முருகன்

13.புரட்சி பாரதம் – பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

திங்கள் 17 மே 2021