மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

விஜய் எங்கே?

விஜய் எங்கே?

அண்மைக் காலமாக நடிகர் விஜய் பேசாமலேயே பேச வைக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அவர் சாதாரணமாக சைக்கிளில் வந்தாலும், ‘பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை நினைவுபடுத்தியே சைக்கிளில் வந்தார்” என்று கொளுத்தி போடப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை திரையுலகின் நட்சத்திரங்கள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விக்ரம், சூரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தும் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்திக்கவில்லை. தற்போது கொரோனா நிவாரண நிதிக்காக தமிழக முதல்வர் அழைப்பு விடுத்ததை ஒட்டி திரையுலகில் அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவியுள்ளார்கள். சிவகார்த்திகேயன் முதல்வரையே சந்தித்து கொடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் இதுவரை விஜய் பெயர் வரவில்லை.

பல்வேறு அரசியல், மக்கள் நலக் கருத்துகளை திரையிலும், ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் உதிர்க்கும் விஜய் இப்போது எங்கே என்ற கேள்வி அவரது ரசிகர்கள் வட்டாரங்களிலேயே எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, “இ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் வசித்துவரும் நடிகர் விஜய், ஏப்ரல் 6 ஆம் தேதி ஓட்டுப் போட்டுவிட்டு மறுநாள் ஏப்ரல் 7ஆம் தேதி, தனது 65வது படத்தின் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றார்.

அங்கே நடிகை பூஜா ஹெக்டேவுடன் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் ஷூட்டிங் முடித்துவிட்டு ஏப்ரல் இறுதியில் சென்னை திரும்பினார்.

வெளிநாட்டிலிருந்து வந்ததால், முன்னெச்சரிக்கையாகத் தனிமையில் இருந்துவந்தார். அப்போதுதான் உடன் நடித்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கொரோனா டெஸ்ட் எடுத்ததில் கொரோனா பாசிட்டிவ் என்ற ரிப்போர்ட் வந்திருக்கிறது. அவர் விஜயைத் தொடர்புகொண்டு தனக்கு பாசிட்டிவ் வந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். ‘ஓ மை காட்’ என்று சொன்ன விஜய் தன்னைத் தீவிரமாக தனிமைப் படுத்திக்கொண்டு குடும்ப மருத்துவர் ஆலோசனைகள் படி மூச்சுப் பயிற்சியும் கால்சியம் மற்றும் விட்டமின் டேப்லெட் எடுத்து வருகிறார்.

தற்போது கொரோனா தொற்று அதிகமாகப் பரவிவருவதாலும் வீரியமும் கூடுதலாக இருப்பதால் வெளியில் வருவதைத் தவிர்த்துவரும் விஜய், விரைவில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறி கொரோனா நிதியும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்” என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில்.

-வணங்காமுடி

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 17 மே 2021