மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

கொரோனா நிதியுதவி: ரூ.1 கோடி வழங்கிய ஆளுநர்!

கொரோனா நிதியுதவி: ரூ.1 கோடி வழங்கிய ஆளுநர்!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் இந்தத் தொகையை நேரில் சென்று பெற்றுக்கொண்டார்.

கொரோனா நெருக்கடிக் காலத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற எழுவர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பின் போது முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி ஆளுநர் வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாம் அலையில் நிலவும் சிக்கலான சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், ஒட்டுமொத்த மனித வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தமிழக அரசின் பொறுப்பை ஏற்கும் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் தனது விருப்பப்படி மானியத்திலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார், மேலும் முதல்வரிடம் ஒரு மாத ஊதியத்தைத் தனது சொந்த பங்களிப்பாகவும் பொது நிவாரணத்துக்கு வழங்கினார்.

கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், தமிழகத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் நிதி தேவைப்படுபவர்களுக்கு உதவவும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ தாராளமாகப் பங்களிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் தனிச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 16 மே 2021