மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

பாஜக- ரங்கசாமி: புதுச்சேரியில் தொடரும் கண்ணாமூச்சி!

பாஜக- ரங்கசாமி: புதுச்சேரியில் தொடரும் கண்ணாமூச்சி!

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மையை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி பெற்றது.

கடந்த மே 7ஆம் தேதி புதுச்சேரியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் என்.ரங்கசாமி. அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில், அவரோடு அமைச்சரவை சகாக்கள் யாரும் பதவியேற்கவில்லை. அடுத்த சில தினங்களில் கொரோனா தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுச்சேரியில் பாஜக கேட்கும் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புதல் வழங்கத் துணை நிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் ரங்கசாமிதான் பரிந்துரை செய்யவேண்டும். ஆனால் ரங்கசாமி இதுவரையில் பரிந்துரை செய்யவில்லை. மற்ற எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொள்ளவில்லை. அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு... முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையிலிருந்தபோது, பாஜக எம்.எல்.ஏ.க்கள், நமச்சிவாயம் தலைமையில் தலைமைச் செயலாளரைச் சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இதையறிந்து முதல்வர் ரங்கசாமி பாஜக எம்.எல்.ஏ., ஏம்பலம் செல்வத்தைத் தொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருக்கிறார். “நான் முதல்வர் இருக்கும்போது நீங்கள் தனியாக கூட்டம் நடத்துவதா?. சபாநாயகரைத் தேர்வு செய்துவிட்டேன், நீங்கள் போய் பதவியேற்றுக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு நீங்கள் இல்லாமல் பதவியேற்றுக் கொள்ளமாட்டோம் என்று அவர் மறுத்துவிட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

முதல்வர் ரங்கசாமி வைத்துள்ள செல்போன் பழைய மாடல். அதிகம் செல்போனை பயன்படுத்தமாட்டார் என்றும், தன்னுடன் பேச நினைப்பவர்கள் நேரடியாக வந்து பேசட்டும் என்று கொள்கை கொண்டவர் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இன்று வரையில், பாஜக முக்கிய பிரமுகர்கள் பேசவேண்டும் என்றால்கூட புதுச்சேரியில் பாஜக நிர்வாகி ஒருவரை நேரடியாக ரங்கசாமியிடம் அனுப்பிவைத்துத்தான் செல்போன் கொடுக்க வைத்துப் பேசுவார்கள் அல்லது துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்துப் பேசுவார்கள் என்கிறார்கள் உடன் இருப்பவர்கள்.

பாஜகவுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்க ரங்கசாமிக்கு விருப்பமில்லை, ஆனால் மூன்று அமைச்சர் பதவி கொடுப்பதாகச் சொல்கிறார். அதை பாஜக தரப்பினரும் ஆலோசித்து வருகின்றனர்.

” 2011இல் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று அரசியல் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவையே ஏமாற்றியவர் ரங்கசாமி. பாஜகவை ஏமாற்றுவது பெரிய விஷயமா?” என்கிறார்கள் அதிமுகவினர்.

-வணங்காமுடி

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

ஞாயிறு 16 மே 2021