மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

மதுரையில் என்ஐஏ சோதனை: ஹார்ட் டிஸ்க், லேப் டாப் பறிமுதல்!

மதுரையில் என்ஐஏ சோதனை:  ஹார்ட் டிஸ்க், லேப் டாப் பறிமுதல்!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் சிலர் செயல்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., ஹிஸ்ப்-அத்-தஹிர் அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில், 'காசிமர் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு’ என்ற தலைப்பில் கருத்துக்களைப் பதிவிட்டதாகப் புகார் எழுந்தது. இக்பல் என்பவரால் இந்த பதிவு முகநூலில் போடப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர் இவ்வாறு பதிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் திடீர் நகர் போலீசார் இக்பல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு மீது இக்பரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மதுரையில் 4 இடங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். கே.புதூர், பெத்தானியாபுரம், காசிமர் தெரு, மெஹபூப் பாலயம் ஆகிய 4 இடங்களில் சோதனை நடைபெற்றிருக்கிறது.

இந்த சோதனையின் போது, மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்குகள், மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், சிம், பென் டிரைவ் மற்றும் பல துண்டுப்பிரசுரங்கள் , ஆவணங்கள் உட்பட 16 டிஜிட்டல் சாதனங்கள் மீட்கப்பட்டன என்றும் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 16 மே 2021