மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் நியமனம்!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் நியமனம்!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது தமிழக மின்சார வாரிய தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று(மே 16) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக தலைமை அதிகாரியாக பணியாற்றியபோது 100% வாக்குபதிவு என்ற முழக்கத்தை முன்னெடுத்தவர். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மை செயலராக பணியாற்றியபோது, கூடுதலாக அறிவியல் நகர துணை தலைவராகவும் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 16 மே 2021