மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

டவ் தே புயல் : பிரதமர் உத்தரவு!

டவ் தே புயல் : பிரதமர் உத்தரவு!

‘டவ்-தே’ புயலால் ஏற்படக்கூடிய சூழல்களைச் சமாளிப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று (மே 15) மாலை ஆலோசனை நடத்தினார்.

அரபிக் கடலில் உருவான ‘ டவ்-தே’ புயல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும், நலியாவுக்கும் இடையே மே 18ஆம் தேதி கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 175 கி.மீ வேகத்துடன் கூடிய பலத்த காற்று வீசும் என்றும் கூறியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரைக் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் புயல் எதிரொலியாகக் கன மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல் படை, கடற்படை ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் புயல் ஏற்படக் கூடிய சூழலைச் சமாளிப்பதற்குப் பிரதமர் மோடி நேற்று மாலை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், மாநில அரசுகள் மக்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

"புயலால் பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி சேமிப்பு, மாற்று மின்சார ஏற்பாடுகள், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு, மருத்துவமனைகளில் கோவிட் மேலாண்மைக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆகியவை அவசியம். ஆக்சிஜன் டேங்கர்கள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை சிவில் விமானப் போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் மீன்வளத்துறை செயலாளர்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 16 மே 2021