மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

“இன்னொரு குழந்தை, அப்பாவையோ அம்மாவையோ இழக்கக்கூடாது!

“இன்னொரு குழந்தை, அப்பாவையோ அம்மாவையோ இழக்கக்கூடாது!

கொரோனா பேரிடரிலிருந்து மீள முடியாமல் ஓராண்டுக்கும் மேல் இந்தியா திணறி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில், 50 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி பாதிப்பு 30ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வரும் வேளையில், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதில் தங்களால் இயன்றளவுக்குப் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மருமகன் விசாகனின் தந்தை வணங்காமுடி நடத்தி வரும், அபெக்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

சாமானிய மக்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். இரவு நேரக் காவலாளி தங்கதுரை என்பவர் தனது ஒரு மாத ஊதியமான ரூ.ரூ.10,101 வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இதுபோன்று சிறுவர்களும் தங்கள் உண்டியல் பணத்தையும், சேமிப்பு பணத்தையும் கொடுத்து கொரோனா பேரிடரிலிருந்து தமிழகம் மீள்வதற்காக, உதவி செய்கின்றனர்.

அந்தவகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரிதானா என்ற மாணவி தனது அப்பாவின் மருத்துவச் செலவிற்காகச் சேமித்து வைத்த பணத்தை வழங்கியிருக்கிறார். கோவில்பட்டி ராஜிவ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகள் ரிதானா. 8ஆம் வகுப்பு படிக்கும் ரிதானா, இன்று பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரில் உள்ள நியாயவிலைக்கடையில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்.பி.கனிமொழியை சந்தித்திருக்கிறார்.

அப்போது தான் சேமித்து வைத்திருந்த ரூ.1970-ஐ கனிமொழியிடம் கொடுத்த ரிதானா, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், ”என்னோட அப்பா ஹாஸ்பிட்டல் செலவுக்காக, அம்மா அப்பா தந்த பாக்கெட் மணியை சேமித்து வைத்தேன். ஆனால் அப்பா எதிர்பாராதவிதமாக ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார். நான் சேமித்து வைத்த ரூ.1970 பணத்தை கொரோனா நோயாளிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுக்கிறேன். என்னை மாதிரி இன்னொரு குழந்தை அப்பாவையோ, அம்மாவையோ இழக்கக் கூடாது என ப்ரே பன்றேன்” என உருக்கமாக எழுதியிருக்கிறார்.

ரிதானா போலவே, தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் மகள் வருண்யா தேவி என்ற சிறுமி தனது பிறந்த நாள் செலவுக்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தைக் கனிமொழியிடம் கொடுத்துள்ளார்.

இச்சிறுவயதிலேயே, உதவும் மனப்பான்மை உள்ள இந்த குழந்தைகளுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 15 மே 2021