மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

டவ் தே புயல்: தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு!

டவ் தே புயல்: தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு!

டவ் தே புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரபில் கடலில் உருவான டவ் தே புயல் காரணமாகத் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டவ் தே புயலால் கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புயல் வரும் 18ஆம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தலைமைச் செயலர், பேரிடர் மேலாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன், புயல் சின்னம் குறித்த தற்போதைய நிலவரத்தையும், மழை பெய்யவிருக்கிற சாத்தியக் கூறுகளையும் எடுத்துக் கூறினார்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து கனமழை முதல் மிகக் கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுள், 162 மீன்பிடிப் படகுகள் தற்போது கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்கவும் அறிவுரை வழங்கிய முதல்வர், மழையால் பாதிக்கப்படுகிறவர்களை முகாம்களில் தங்க வைக்கும்போது, கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும், முழு வீச்சில் வருவாய்த் துறையினர் கண்காணிப்புப் பணிகளைச் செய்யுமாறும், அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணித்து வரும்படியும் அறிவுறுத்தினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்களும் மதுரை (2), கோயம்புத்தூர் (1) மற்றும் நீலகிரி (1) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் அக்குழுக்களைக் கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 15 மே 2021