மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

மாஜி மந்திரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

மாஜி மந்திரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சொந்த ஊர், பண்ருட்டி அருகே, மேல்குமார மங்கலம் கிராமம். தற்போது, சென்னை- கும்பகோணம் சாலையில் பண்ருட்டி அருகே உள்ள திருமலை நகரில் பங்களாகட்டி வசித்து வருகிறார்.

அதிமுக தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, சொந்த ஊரில் அவருக்குச் சொந்தமான இடத்தில் தீ வைத்து சொத்துகளைச் சிலர் சேதம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான தாமோதரன் வீட்டில் திருடுபோனது.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், அச்சமான அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட காவல்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு தான் வசிக்கும் வீட்டுக்கு இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அந்த அதிகாரியும் உடனடியாக தனக்கு கீழ்வுள்ள அதிகாரிக்குக் கட்டளையிட்டுள்ளார். இதனால், பண்ருட்டி காவல் நிலையத்திலிருந்து பீட் என்ற பெயரில், தினந்தோறும் இரவு நேரத்தில் முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

-வணங்காமுடி

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 15 மே 2021