மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

புதுச்சேரி: நியமன எம்.எல்.ஏ.வை வாபஸ் வாங்கும் பாஜக!

புதுச்சேரி: நியமன எம்.எல்.ஏ.வை வாபஸ் வாங்கும் பாஜக!

புதுச்சேரியில் பாஜக அவசரமாக நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில், தேஜ கூட்டணியில் பாஜக ஆறு இடங்களையும், என்.ஆர்.காங்கிரஸ் பத்து இடங்களையும் பிடித்து கூட்டணி ஆட்சியை உறுதி செய்தது. பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சொரோனா கடந்த 6ஆம் தேதி இரவு, பாஜக அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் ரங்கசாமி நான்மட்டும் முதலில் பதவியேற்றுக் கொள்கிறேன், பிறகு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்ளட்டும் என அந்த பட்டியலைத் தவிர்த்துவிட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு இன்று (மே 15) புதுச்சேரி திரும்புகிறார். தொடர்ந்து 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதால்,

அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொள்வது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கூட்டணிக் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள்,சலசலப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், அதிமுக அமைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான அன்பழகன், திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், கூட்டணிக் கட்சிக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அன்பழகனின் திடீர் அறிக்கை பற்றி நாம் விசாரித்ததில், ”அதிமுக ஐந்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் புதுச்சேரியில் அரசியல் செய்தாக வேண்டும். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் அன்பழகன் கோரிக்கை வைத்திருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமியும் பாஜக தலைமையிடம் பேசி அதிமுகவுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ பதவியை உறுதி செய்திருக்கிறார்.

இதனால் சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த மூவருக்கு நியமன எம்.எல்.ஏ,பதவி வழங்கியதில் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளது பாஜக தலைமை, அவருக்குப் பதிலாக அதிமுக அன்பழகனை நியமன எம்.எல்.ஏ.வாக மத்திய உள்துறை பரிந்துரை செய்யவுள்ளது” என பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணங்காமுடி

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

சனி 15 மே 2021