மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

இது பேருதவி : பொதுமக்கள் மகிழ்ச்சி!

இது பேருதவி : பொதுமக்கள் மகிழ்ச்சி!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திமுக தேர்தல் வாக்குறுதிப் படி கொரோனா பாதிப்பு நிவாரணமாக இரண்டு தவணையாக ரூ.4000 வழங்கத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முதல் தவணையை முதல்வர் ஸ்டாலின் மே 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 15ஆம் தேதி முதல் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு 2ஆயிரம் வழங்கும் பணி நடைபெறும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

இதற்காகத் தமிழகம் முழுவதும் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் அத்திட்டத்தை, எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கொரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்  தொடங்கி வைத்தார். சேலம் ஜாகீர் காமிநாய்க்கன் பட்டி நியாயவிலைக்கடையில் எம்.பி., எஸ்.ஆர். பார்த்திபன் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சேலம் பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலைக் கடையில் நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின் பயனாளி ஒருவர் கூறுகையில்  , “இந்த கொரோனா காலத்தில்  குடும்பத்தை  எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில் இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் 4 ஆயிரம் ரூபாய் அறிவித்து, முதல் தவணையாக ரூ. 2,000 கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டு வாடகை உள்ளிட்ட குடும்ப செலவுக்கு, இது பேருதவியாக இருக்கும்” என்றார்.

இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், ”தேர்தல் வாக்குறுதியை இவ்வளவு  விரைவில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.  என் கணவர் தினக் கூலிக்குக் கிடைக்கும் வேலைக்குச் செல்வார். தற்போது அதற்கும்,  வழியில்லை. இந்த சூழலில் இந்த 2000 ரூபாய் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மே 22 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும்  நிவாரணம் கொடுக்க வேண்டும்  ஞாயிற்று கிழமை நாளையும் ரேஷன் கடை இயங்க அனுமதி  அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 15 மே 2021