மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

டவ் தே புயல்: தமிழகத்தில் மீட்புக் குழு!

டவ் தே புயல்:  தமிழகத்தில் மீட்புக் குழு!

அரபிக் கடலில் டவ் தே புயல் உருவான நிலையில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியது. இதற்கு மியான்மர் நாடு வழங்கிய டவ் தே என்று பெயர் வைக்கப்பட்டது.

டவ் தே புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உருவான முதல் புயல் இதுவாகும். இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது.

இதையொட்டி கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களின், கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிகக் கனமழை முதல் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 19ஆம் தேதி வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 50க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் நேற்று பெய்த கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோன்று புயல் கரையைக் கடக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

சனி 15 மே 2021