மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

இ பாஸ் அல்ல-இ பதிவு: தமிழக அரசு விளக்கம்!

இ பாஸ்  அல்ல-இ பதிவு: தமிழக அரசு விளக்கம்!

வரும் மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்றும், இ ரிஜிஸ்டர் வேறு, இ பாஸ் வேறு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று (மே 13) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பில் இ ரிஜிஸ்டர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

“வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது.’

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் மேற்கொள்ள இ பதிவு முறை கட்டாயம் ஆக்கப்படும்.

https://eregister.tnega.org என்ற முகவரியில் மே 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்”என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை மீண்டும் இ பாஸ் என புரிந்துகொண்டு மின்னம்பலம் உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று இரவு மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில்,

“ மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது. மாறாக மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது”என்று அந்த விளக்கத்தில் அரசு தெரிவித்துள்ளது.

அதாவது இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும், ஆனால், இ பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பதுதான் இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

-வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

சனி 15 மே 2021