மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

திடீரென வார் ரூமிற்கு விசிட் அடித்த முதல்வர்!

திடீரென வார் ரூமிற்கு விசிட் அடித்த முதல்வர்!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டளை மையத்தை நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்றதிலிருந்து மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து வருகிறார். இவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வார் ரூம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள்,வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், மருந்து கையிருப்பு ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒருங்கிணைக்கும் பணிகளை கொரோனா வார் ரூம் செய்து வருகிறது. இந்த மையம், 108 மற்றும் 104 அவசர தொலைபேசி எண் வழியே வரும் அழைப்புகள், சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உடன் கேட்கப்படும் மருத்துவ உதவிகளை தரம் பிரித்து தேவையான உதவிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று(மே 14) இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென்று வார் ரூமிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல்வரின் செயலாளர்கள் உதய்சந்திரன், உமாநாத், தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

மையத்தில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் ஒதுக்கீடு போன்ற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை முதல்வர் ஸ்டாலின் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். ஊழியர்களும் வார் ரூமில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு விளக்கமளித்தனர்.

அப்போது அங்கு வந்த அவசர போன்காலை எடுத்து நான் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். போனில் பேசிய அந்த நபர் தன்னுடைய உறவினருக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனடியாக படுக்கை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என முதல்வர் அவரிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து, அங்குள்ள ஊழியர்களிடம் கொரோனா தடுப்பு பணி குறித்து பேசிய முதல்வர், மையத்தின் மூலம் சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் காலியிட விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வார் ரூமிற்கு வரும் அழைப்புகள் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 15 மே 2021