*மீண்டும் இ பாஸ்!

politics

கொரோனா இரண்டாம் அலைப் பரவல் அதிகமாவதை ஒட்டி வரும் மே 17 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் இ பாஸ் முறை அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு (மே 14) வெளியிட்டுள்ள அறிவிப்பில்… மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மாலை 4 மணி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

**தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் 12 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,மே 17 ஆம் தேதி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.

** ஏடிஎம், பெட்ரோல் பங்க், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் எப்போதும் போல செயல்படும்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளுக்கு அனுமதி இல்லை.

தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை

**இ பாஸ்**

வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது.’

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் மேற்கொள்ள இ பதிவு முறை கட்டாயம் ஆக்கப்படும்.

https://eregister.tnega.org என்ற முகவரியில் மே 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்”என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *