மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு!

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,31,377ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18,359 பேர் ஆண்கள், 13,533 பேர் பெண்கள். இன்று மட்டும் 1,53,363 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனையில்130 பேர், அரசு மருத்துவமனையில் 158 பேர் என மொத்தம் 288 பேர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,056ஆக அதிகரித்துள்ளது.

இன்று 20,037 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,18,982ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,95,339ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 6,538 பேரும், கோவையில் 3,197 பேரும், செங்கல்பட்டில் 2,225 பேரும், மதுரையில் 1,250 பேரும், திருச்சியில் 1224 பேரும், திருவள்ளூரில் 1410 பேரும், கன்னியாகுமரியில் 1025 பேரும், காஞ்சிபுரத்தில் 889 பேரும், நெல்லையில் 831 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, நிமோனியா ஆகியவைதான் அதிகளவு மரணத்துக்கு காரணம். இன்று உயிரிழந்தவர்களில் 220 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 68 பேர் எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 14 மே 2021