மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

குற்றப் பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால்

குற்றப் பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால்

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், காத்திருப்பு பட்டியலிலிருந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கியும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அதில், மதுரை தெற்கு மண்டல ஏடிஜிபியாக இருந்த அபாஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

உளவுத் துறை (உள்நாட்டு பாதுகாப்பு) டிஐஜியாக இருந்த ராஜேந்திரன், சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார்.

மேலும் காத்திருப்பு பட்டியலிலிருந்த 12 அதிகாரிகளுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்பு பட்டியலிலிருந்த டிஜிபி பிரதீப் வி. பிலிப், தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஏடிஜிபி ஜெயந்த் முரளி, சென்னை ஆயுதப்படைஏடிஜிபியாகவும்,

காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐஜி ஹெச்.எம்.ஜெயராமன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாகவும்,

காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐஜி தினகரன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐஜி லோகநாதன், சென்னை ஆயுதப்படை ஐஜியாகவும் நியமனம்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி மூர்த்தி, சேலம் நகரக் காவல் துறை துணை ஆணையராக நியமனம்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி எஸ்.செந்தில்,தூத்துக்குடி, பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி, எஸ்பியாகவும்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி எஸ்.எஸ்.மகேஷ்வரன், மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்பியாகவும்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி அர.அருளரசு, சென்னை, சட்டம் - ஒழுங்கு ஏஐஜியாகவும்,

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி பி.சரவணன், சென்னை, நிர்வாகப்பிரிவு ஏஐஜியாகவும்

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி சி.ராஜா, சென்னை வணிக குற்றப்பிரிவு எஸ்பியாகவும்,

காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்பி டி.பி. சுரேஷ் குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்பி-2 ஆகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வெள்ளி 14 மே 2021