மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

‘இந்திய அரசை காணவில்லை’!

‘இந்திய அரசை காணவில்லை’!

‘இந்திய அரசை காணவில்லை’ என பிரபல அவுட்லுக் பத்திரிகை வெளியிட்ட கவர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு லட்சக்கணக்கில் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இந்தச் சூழலில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவில் இந்தப் பெருந்தொற்று பரவ, பல மாநிலங்களில் தேர்தல் காரணமாக நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள், மத கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி அளித்ததே காரணம் என பலரும் விமர்சித்தனர். கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது காரணமாக பலரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், கங்கை நதியில் சடலங்கள் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் மயானங்கள் 24 மணி நேரமும் எரிந்துகொண்டிருக்கின்றன. இப்படி இந்தியாவின் நிலைமை மிக மோசமாகி கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் இந்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்றும் இந்திய அரசு பேரிடர் காலத்தைக் கையாளும் விதம் குறித்தும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல அவுட்லுக் பத்திரிகை தங்கள் புத்தகத்தின் முகப்பில் ‘இந்திய அரசைக் காணவில்லை’ என்று புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் பெயர் இந்திய அரசு, வயது 7 மற்றும் கண்டுபிடித்தால் குடிமக்களிடம் தெரிவியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கவர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை. எஞ்சி இருப்பவை சென்ட்ரல் விஸ்டா திட்டம், பிரதமரின் புகைப்படங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகேஷ் கரியப்பா ‘அமைச்சர் அமித் ஷாவைக் காணவில்லை’ என டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இதுகுறித்தான ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது.

-வினிதா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

வெள்ளி 14 மே 2021