மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

அரசு காப்பீட்டு அட்டையை ஏற்காத மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

அரசு காப்பீட்டு அட்டையை ஏற்காத மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், " திருப்பூரில் வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. மாவட்டத்தில் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். நாளை முதல் நிறுவனங்களை மூடுவதாக உறுதி அளித்திருக்கின்றனர்.

பத்திரிக்கையாளர்கள், கொரோனாவால் உயிரிழந்து வரும் நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

திருப்பூரில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தால், மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும். அரசு காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகங்கள் கொரோனா பாதிப்பு, பரபரப்பு காட்சிகளை அதிகம் வெளியிடாமல் குணமாகி வீடு திரும்புவோரின் படங்கள், பேட்டிகளை வெளியிடவேண்டும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாமல் நம்பிக்கை ஏற்படுத்த ஊடகங்களை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 13 மே 2021