மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட  ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போட அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலர், ஊசி போட்டுக்கொள்ளத் தயங்குகின்றனர். மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் திரை, அரசியல் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது இல்லத்தில் வைத்து இன்று (மே 13) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த அவர் நேற்று தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் ரஜினி தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து அவரது இளையமகள் சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார். கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர் கொள்வோம்” என்று பதிவிட்டு ரஜினி ஊசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 13 மே 2021