மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

கொரோனா நிவாரணம்: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!

கொரோனா நிவாரணம்: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!

பாஜகவின் சட்டப்பேரவை குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நெல்லை தொகுதி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், கொரோனா நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிலிருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு சென்றுள்ளனர். இதில் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவை குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் கட்சியினரும் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளை வைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு அளிக்க வேண்டும்.

ரேஷன் கடையில் 2000 ரூபாய் வழங்குவது போதாது. முதல்வர் ஸ்டாலின் சென்று கிராம சபை பிரச்சாரம் செய்த போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிதியாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அந்த 5000 ரூபாயை இப்பொழுது முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், திரைத்துறை, சின்னதிரை தொழிலாளர்கள், திருமண புகைப்பட கலைஞர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் உடனடியாக 5000 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்..

அனைத்து திருமண மண்டபங்களுக்கும் சொத்துவரி கொரோனா காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்.

அனைத்து வீடுகளுக்கும் மின்சார கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அனைத்து விதமான வங்கிக் கடன் தவணைகளை கொரோனா காலத்தில் ரத்து செய்து, அதைத் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும்போது கொரோனாவால் இறந்தவர்களுக்கு 1 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறினீர்கள். இப்பொழுது 50 லட்சமாவது தரவேண்டும். கொரோனா பாதிப்பு முடியும் வரை. ரேஷன் கடையில் சர்க்கரை, சமையல் எண்ணெய்,பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் மாஸ்க் மற்றும் சானிடைசர் இலவசமாகக் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 13 மே 2021