மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

பேருந்துகளில் சிசிடிவி கேமரா!

பேருந்துகளில் சிசிடிவி கேமரா!

நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இன்று(மே 13) காலை போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “ பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின்மூலம் மகளிர் தங்களுக்கு மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வரை மிச்சமாவதாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் இன்னும் சீரமைக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இன்னும் புதுமையான விஷயங்களை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மதியத்துக்கு பிறகு ஆர்.டி.ஓ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். பேருந்து வழித்தடங்களை மக்கள் அறிந்துகொள்ள சலோ ஆப் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

சென்னையில் 1400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 13 மே 2021