மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

சாலை மேல் சாலை போடக்கூடாது: தலைமைச் செயலாளர்!

சாலை மேல் சாலை போடக்கூடாது: தலைமைச் செயலாளர்!

சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத் துறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

பொதுவாக ஊரக, நகர பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலை மீதே மீண்டும் சாலை அமைப்பதால், சாலையின் உயரம் அதிகரிக்கிறது. இதனால் மழை காலங்களில் மழை வெள்ளம் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடும் சூழல் ஏற்படுகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி நெடுஞ்சாலைத் துறைக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில், “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே, உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று அடர் தார்தளம் போடப்பட்டிருக்கும். ஆதலால் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில், மேலும் ஒரு அடர்தளம் போட்டு சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியதில்லை.

எனவே, நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது சாலைகளின் மேற்பரப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளின் மேற்தளம் ஏற்கெனவே போதுமான கனத்துடன் (Crust) கட்டமைக்கப்பட்டுள்ளதால் பி.பி.டி. சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை.

எந்த சூழ்நிலையிலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் மட்டம் அதிகரிக்கப்படக்கூடாது.

சாலைகளின் மேற்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் களத்திற்குச் சுரண்டி எடுத்துவிட்டு (Milling) அதே அளவுக்கு மேற்தளம் இடவேண்டும். இது வீடுகளுக்குள் நீர் புகுவதைத் தடுக்கும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் தார் மேற்தளத்திற்கு (BC) மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

சாலை தார் மேற்தள கனமானது ( thickness of BC), இந்தியச் சாலை காங்கிரஸ் விதி 37- 2018-ன் படி சாலையின் போக்குவரத்து செறிவுக்கேற்ப மாறுபடும்" என கூறியுள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வியாழன் 13 மே 2021