மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

இன்னும் இரு மாதங்களுக்கு ஊரடங்கு: எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

இன்னும் இரு மாதங்களுக்கு ஊரடங்கு: எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமாக இருக்கும் நிலையில் ஊரடங்கு தொடர வேண்டிய அவசியத்தைப் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து மே 12ஆம் தேதி டெல்லியில் அவர் அளித்த பேட்டியொன்றில், “தற்போது இந்தியாவின் 718 மாவட்டங்களில் கொரோனா சோதனை செய்யப்படுபவர்களில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக பாசிட்டிவ் விகிதம் இருக்கிறது. இதில் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு உள்ளிட்டவை அடங்கும். அதிக எண்ணிக்கையிலான தொற்று நோய் பரவலைக்கொண்டிருக்கும் மாவட்டங்கள் மேலும் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை முழு ஊரடங்கில் இருக்க வேண்டும்.

10 சதவிகிதம் வரை பாதிப்பிருக்கும் மாவட்டங்களை உடனடியாக முழு ஊரடங்குக்கு உட்படுத்த வேண்டும். ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்துவதன் மூலம் தொற்று எண்ணிக்கையை 5 சதவிகிதமாகக் குறைத்த பிறகுதான் ஊரடங்கைத் தளர்த்த வேண்டும். ஆனால், இது ஆறு முதல் எட்டு வாரங்களுக்குக் குறைந்து நடக்காது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் டாக்டர் பார்கவா.

மேலும் அவர் டெல்லியைப் பற்றி குறிப்பிடுகையில், “தலைநகர் டெல்லியில் நேர்மறை விகிதம் சுமார் 35 சதவிகிதத்தை எட்டியிருந்தது. ஆனால், இப்போது அது 17 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எனவே, டெல்லியில் இன்னும் சில மாதங்களுக்கு ஊரடங்குத் தேவை. மாறாக அதற்குள் டெல்லி திறந்துவிடப்பட்டால் அது ஒரு பேரழிவாக இருக்கும்” என்று எச்சரிக்கிறார் பார்கவா.

“கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கோவிட் - 19 தொடர்பான தேசிய பணிக்குழுவின் கூட்டம் நடந்தது. அதில் 10 சதவிகிதம் நேர்மறை விகிதம் அல்லது அதற்கும் அதிகமான பகுதிகளை உடனடியாக பொது முடக்கத்துக்கு உட்படுத்துமாறு பரிந்துரை செய்தோம். ஆயினும்கூட, ஏப்ரல் 20 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், பிரதமர் மோடி ஊரடங்கு என்பதை கடைசி முயற்சியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்களில் கவனம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். எங்களுக்குள்ள ஒரே அதிருப்தி எங்களது பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று கூறியுள்ளார் டாக்டர் பார்கவா.

இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியா முழுவதும் கொரோனா 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பாதித்த பகுதிகளில் இன்னும் இரு மாதங்கள் முழு ஊரடங்கு தேவை என்பதே ஐசிஎம்ஆரின் பரிந்துரையாக இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் அதை இரு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

- வேந்தன்

,

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வியாழன் 13 மே 2021