மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா ஆகிய நான்...

தளிக்கோட்டை  ராசுத்தேவர் பாலு ராஜா  ஆகிய நான்...

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் 16ஆவது சட்டமன்றத்தின் முதல் நாளான மே 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது திமுகவின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றபோது தனது தாத்தாவின் பெயரை சாதிப் பின்னொட்டோடு குறிப்பிட்டுப் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். அதே பாணியில் சொல்வதாக கருதி, ‘தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா ஆகிய நான்’ என்று பதவியேற்றுக் கொண்டார் டி.ஆர்.பி.ராஜா.

அதாவது தனது பெயரையோ, தன் அப்பா பாலு பெயரையோ சாதியோடு சேர்க்காத ராஜா தனது தாத்தா ராசுவை ராசுத்தேவர் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாதியைப் பெயருக்குப் பின்னால் போடுவதை ஒழித்ததே பெரியாரின் வெற்றி என்று திமுகவினர் மேடைக்கு மேடை சொல்லி வரும் நிலையில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்திலேயே தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா ஆகிய நான் எனக் குறிப்பிட்டது பல ஊடகங்களால் கண்டும் காணாமல் விடப்பட்டது.

இப்படி பதவியேற்ற பதிவை டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டரில் நேற்று (மே 12) காலை பகிர்ந்துகொண்டார்.

தமிழகத்தில் சாதிக் கட்சி என்று பொதுவாக சொல்லப்படும் கட்சிகள் கூட இவ்வாறு செய்யாத நிலையில் தாத்தாவின் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்து டி.ஆர்.பி.ராஜா சொன்னதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அபிமானி ஒருவர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

தன்னை புத்தர், புலே, அயோத்தி தாசர், பெரியார், அம்பேத்கர், எம்.சி.ராஜா, திருமாவளவன் ஆகியோரின் பின்பற்றாளராகக் குறிப்பிட்டிருக்கும் பாபு ரவீந்தர் என்பவர் ட்விட்டரில்.

“தளிக்கோட்டை ராசுதேவர் பாலு ராஜா எனும் நான்"

பார்ப்பனர்கள் இல்லா சட்டமன்றம் தான். ஆனால், பார்ப்பனியம் இல்லா சட்டமன்றம் இல்லை” என்று டி.ஆர்.பி. ராஜாவின் பதவியேற்பு வீடியோவைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே டெல்டாவுக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்கப்படாததில் டி.ஆர்.பி.ராஜா வருத்தத்தில் இருப்பதாக டெல்டாவில் பேச்சிருக்கும் நிலையில், இவ்வாறு ராஜா சொல்லி பதவியேற்றிருப்பது திமுகவுக்குள்ளும், திமுகவைத் தாண்டியும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 13 மே 2021