மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

எட்டுவழிச் சாலைக்கு அனுமதியில்லை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எட்டுவழிச் சாலைக்கு அனுமதியில்லை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால் எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய அரசு பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் நிலையில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எட்டுவழிச் சாலைக்கு அனுமதியில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நேற்று (மே 12) சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் மக்கள் நெருக்கடி மிகுந்த நிலையில் இது போன்ற பூங்காக்கள் தேவை. தோட்டக்கலை மூலம் 24 பூங்காக்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகள் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரியாகப் பராமரிப்பதுடன், 120க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அட்மா திட்டத்தில் பணி செய்த வேளாண் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு நடத்தி பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்" என்றார்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்யப்படும். முதல்வர் சொன்னதைச் செய்வார் என்று தெரிவித்தார்.

மேலும் எட்டுவழிச் சாலை மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்துப் பதிலளித்த அவர், “இந்த ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம். அதை முதல்வர் பார்த்துக்கொள்வார்” என்றார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 13 மே 2021