மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

நாட்டு மருந்துக் கடைகளுக்கு அனுமதி!

நாட்டு மருந்துக் கடைகளுக்கு அனுமதி!

கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து நாட்டு மருந்துக் கடைகளில் ஊரடங்குக்கு முன்பு கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஊரடங்குக்குப் பின்பு நாட்டு மருந்துக் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் காய்கறி, மளிகை கடைகளைப் போன்று நாட்டு மருந்துக் கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனால் கொரோனாவில் இருந்து பாதுகாக்க பெரும்பாலானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் ஊரடங்குக்கு முன்பு நாட்டு மருந்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதுகுறித்த செய்தியை நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்! என்ற தலைப்பில் ஊரடங்குக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காய்கறி, மளிகை கடைகளைப் போன்று பழக்கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற ஆங்கில மருந்துக் கடைகளைப் போல நாட்டு மருந்துக் கடைகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா விதிகளைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 12 மே 2021