மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

தமிழகத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று(மே 12) ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 17,442 பேர் ஆண்கள், 12,913 பேர் பெண்கள்.

இன்று ஒரே நாளில் 293 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.

19,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 12,79,658 பேர் குணமடைந்துள்ளனர். 1,72,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 1,56,356 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சென்னையில் மட்டும் இன்று 7,564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 4,12,505 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 2670 பேரும், கோவையில் 2636 பேரும்,, கன்னியாகுமரில் 1076 பேரும், மதுரையில் 1172 பேரும், திருவள்ளூரில் 1344 பேரும், ஈரோட்டில் 961 பேரும் திருச்சியில் 879 பேரும், காஞ்சிபுரத்தில் 767 பேரும், திருநெல்வேலியில் 742 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 12 மே 2021