மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி!

உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி!

மே1 ஆம் தேதி திட்டமிட்டப்படி 18-45 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் ஏறுமுகத்தில் இருப்பதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மே 1ஆம் தேதி 18-45 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த பயனர்கள் முன்பதிவு செய்தும், தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லாததால், அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக அமைந்துள்ள அரசு தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க, உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 12) தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதல்வர் அறையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18-45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18- 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

அதுபோன்று, தமிழகத்துக்கான மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவு குறைவாக உள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ஆக்சிஜனின் அளவு உயர்த்தப்பட்டாலும், தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது. போதிய அளவு ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்கவும், பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 12 மே 2021