மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

12ஆம் வகுப்பு தேர்வு எப்போது?

12ஆம் வகுப்பு தேர்வு எப்போது?

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாறிய நிலையில், தேர்வு எப்போது நடத்தப்படும்? ஆன்லைனில் நடத்தப்படுமா அல்லது நேரடியாக நடத்தப்படுமா என பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தேர்வை நடத்துவது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று (மே 12) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

உயர் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் அபூர்வா, தமிழ்நாடு பெற்றோர். ஆசிரியர் கழக நிர்வாகிகளான உசேன் மற்றும் வீரப்பெருமாள், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி, பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு எவ்வாறு நடத்துவது, மதிப்பெண் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘கொரோனா பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக தற்போது தேர்வு நடத்த முடியாத நிலை இருக்கிறது. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறுவதால் தொற்று குறைந்தவுடன் தேர்வு நடத்தப்படும். தேர்வு ஒத்தி வைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படாது.

தேர்வு நடத்துவதற்கு முன்னர் முறையான கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன் பின்னர் நடத்தப்படும். தேர்வை எப்படி நடத்துவது என முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும் இந்த காலகட்டத்தில் மாணவர்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 12 மே 2021